Searching...
Sunday, 8 January 2017

இயற்கை பூச்சி விரட்டி - தயார் செய்யும் முறை


iyarkai poochi viratti marundhu thayarikkum murai - இயற்கை பூச்சி விரட்டி - தயார் செய்யும் முறை 

iyarkai poochi viratti thayarikkum murai, iyarkai vivasayam, iyarkai velanmai, natural farming tips in tamil, Natural ways to kill pesticides and insects
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம் : 



இயற்கை விவசாயம் செய்ய எந்த ஒரு நிபந்தனைகளுக்கும், கால அளவுகளுக்கோ பொருந்தாது . வரும் முன் காப்பதே இயற்கை விவசாயத்தில் சிறந்தது .

எந்த ஒரு வளர்ச்சி ஊக்கியும், பூச்சி விரட்டியும் குறிப்பிட்ட காலத்தில் தான் பயன்படுத்த வேண்டும் என்று இயற்கை வேளாண்மையில் கிடையாது .

பயிர் செய்யும் பொழுது விதைப்புக்கு முன் பிஜாமிர்தம் விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் வேர் சம்பந்தமான நோய்கள் வரும் முன்னரே காத்துக்கொள்ளலாம்.

பயிர் வளர்ந்து வரும் போதே பஞ்சகாவியம் நீம் அஸ்திரம் , அக்னி அஸ்திரம் , பிரம்மாஸ்திரம் , முடக்கு , பஞ்சகாவியம் போன்ற அனைத்து இயற்கை பாதுகாப்பு முறைகளையும் குறிப்பிட்ட நாள் இடைவெளில் கொடுக்கும் பொழுது பயிர் நன்கு ஆரோக்யமாக செழித்து வளரும் .

இதன் மூலம் பயிர் வளரும் பொழுதே எந்த நோய்க்கும் அல்லது இயற்கை இடர்படுகளுக்கும் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக செழித்து வளர்ந்து பயன் தரும் .


பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது.

இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் தாவரத்திலிருந்து விரட்டப்படுகின்றன. எனவே பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.

இயற்கை பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை


1. கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (எ.கா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய்
2. இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். (எ.கா) எருக்கு, காட்டமணக்கு
3. ஆடு, மாடு உண்ணாத இலை தழைக்ள்- (எ.கா) ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி
4. துர்நாற்றம் வீசும் இலை தழைகள்- (எ.கா) பீச்சங்கு, சீதா, பீ நாரி, ஊமத்தை

தேவையான பொருட்கள்: (ஒரு ஏக்கருக்கு தேவையான அளவுகள்)


1. காட்டாமணக்கு – 1/2 கிலோ
2. குமிட்டிகாய் – 1/2 கிலோ
3. ஊமத்தை – 1/2 கிலோ
4. பீச்சங்கு – 1/2 கிலோ
5. சோற்றுக்கற்றாழை – 1/2 கிலோ
6. எருக்கு – 1/2 கிலோ
7. அரளி – 1/2 கிலோ
8. நொச்சி – 1/2 கிலோ
9. சப்பாத்திக் கள்ளி – 1/2 கிலோ
10. ஆடா தோடா – 1/2 கிலோ
11. நெய்வேலி காட்டாமணக்கு- 1/2 கிலோ
12. வேம்பு – 1/2 கிலோ
13. மாட்டு கோமியம் – 1/2 கிலோ
14. மாட்டு சாணம் – 1/2 கிலோ
15. மஞ்சள் தூள் – 1/2 கிலோ

மேலே குறிப்பிட்டடுள்ளவைகளில் குறைந்தது 5 வகை தாவரத்தின்
இலை தழைகளை எடுத்து சிறு துண்டுகாளக நறுக்கி, உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும்.

மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும். அதற்கு பின் கரைசலை வடிகட்டி தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப்பயன்படுத்தலாம்.

இயற்கை பூச்சி விரட்டி பயன்படுத்தும் முறை:


இலைவழி ஊட்டம்/தெளிப்பு: பத்து லிட்டர் நீருக்கு 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து (5 விழுக்காடு) தெளிக்க பயன்படுத்தலாம்.

இயற்கை பூச்சி விரட்டி சிறப்பான தன்மைகள்:
1 எளிதில் தயாரிக்கலாம்.
2. குறைவான முதலீடு.
3. தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் எவ்விதமான விஷ வீழ்படிவையும் ஏற்படுத்தாது.
4. இயற்கையை பாதிக்காதவை.
5. இயற்கை பூச்சிவிரட்டி கரைசல் 75% பூச்சிவிரட்டியாகவும் 25% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.

iyarkai poochi viratti thayarikkum murai, iyarkai vivasayam, iyarkai velanmai, natural farming tips in tamil, Natural ways to kill pesticides and insects

7 comments: